ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 9 நவம்பர் 2021 (21:35 IST)

அடுத்த 2 தினங்களுக்கு பொதுமக்கள் வெளியே வரவேண்டாம்: அமைச்சர் வேண்டுகோள்

அடுத்த இரண்டு தினங்களுக்கு பொது மக்கள் வெளியே வரவேண்டாம் என அமைச்சர் சாத்தூர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார் 
 
சென்னையில் பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதியில் இருக்கும் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு அம்மா உணவகங்கள் மூலம் உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்
 
மேலும் அடுத்த இரண்டு நாட்கள் சென்னையில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியே வரவேண்டாம் என்றும் இரண்டு நாட்களுக்கு கனமழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் பேரிடர் காலங்களில் சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்