வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 11 ஜூலை 2019 (14:26 IST)

இந்த அரசியலே நமக்கு வேண்டாம் - முக அழகிரி திடீர் முடிவு?

முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கலைஞர் உயிருடன் இருந்தபோது, அக்கட்சியிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டவர் முக.அழகிரி. கடந்த வருடம் கருணாநிதி மறைந்ததை ஒட்டி, மீண்டும் அழகிரியை திமுகவில் சேர்கப்படலாம் என்ற நிலை வந்தபோது, தற்போதைய திமுக தலைவராக ஸ்டாலின் அதை நிராகரித்தார்.
இதையடுத்து சென்னையில் கருணாநிதி சமாதிவரை தனது ஆதரவாளர்களுடன்  அழகிரி ஊர்வலம் சென்றார். ஆனால் அந்த ஊர்வலத்திற்கு ஸ்டாலின் ஆதரவாளர்களிடன் ஆதரவு இல்லாததால் முக அழகிரிக்கு ஏமாற்றமே ஏற்பட்டது.
 
இந்நிலையில் அவர் மற்ற கட்சியில் சேருவார், என்று ஊடகங்களில் செய்தி வந்த நிலையில், சில நாட்களாக எந்த அறிவிப்புகளையும் அவர் வெளியிடாமல் இருந்தார்.
 
இந்நிலையில்தான் சென்ற வாரம்  வெறும் மக்களவைத் தேர்தலில் பிரசாரம் செய்ததற்க்காக ஸ்டாலின் மகன் உதய நிதிக்கு இளைஞர் அணி செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
ஆனால் கட்சியின் ஆரம்பம் முதல் இருந்து வந்து கருத்து வேறுபாடு காரணாக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முக அழகிரிக்கு ஸ்டாலின் பாரபட்சம் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
 
இந்நிலையில் அழகிரி தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து கவனித்துவருவதாகவும், தன்னை சந்திக்க வருவோரிடம் இனிமேல் அரசியலே வேண்டாம் என்று தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகிறது. அண்ணனின் நல்ல முடிவுகளுக்காக அவரது ஆதரவாளர்களும் காத்துக்கொண்டுள்ளனர்.