வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 19 அக்டோபர் 2024 (10:56 IST)

சென்னையில் இருந்து வேலூருக்கு 90 நிமிடம்.. இளம்பெண்ணின் உயிரை காப்பாற்றிய இதயம்..!

heart
வேலூரிலிருந்து 90 நிமிடங்களில் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட தானம் செய்யப்பட்ட இதயம், இதய செயலிழப்பு பாதித்த 34 வயது பெண்ணுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவலை சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை வெளியிட்டது.

சாலை விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த 20 வயது இளைஞர், வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார். அதையடுத்து, அவரது இதயம் தானமாக பெறப்பட்டது. எம்ஜிஎம் மருத்துவமனை நிபுணர் டாக்டர் கே.ஆர். பாலகிருஷ்ணன் தலைமையிலான குழு, நேற்று காலை வேலூர் சென்று இளைஞரின் இதயத்தை எடுத்து, காலை 11.07 மணிக்கு சென்னை நோக்கி பயணம்பட்டனர்.

காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், மதுரவாயல், கோயம்பேடு வழியாக எம்ஜிஎம் மருத்துவமனைக்கு பகல் 12.35 மணிக்கு இதயம் அழைத்து வரப்பட்டது. 34 வயது பெண்ணுக்கு அந்த இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. போக்குவரத்து போலீசார் தடையற்ற வழித்தடம்  உருவாக்கி இதயத்தை வேகமாக மருத்துவமனைக்கு கொண்டு வர உதவினர்.


Edited by Mahendran