செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 28 நவம்பர் 2017 (15:29 IST)

இறந்த நிலையில் கரை ஒதுங்கும் டால்பின்கள்: சுனாமியின் அறிகுறியா??

தூத்துக்குடி மாவட்டத்தின் கடலோரப்பகுதிகளில் இறந்த நிலையில் டால்பின்கள் கர ஒதுங்கியுள்ளதால் மக்கள் மத்தியில் சுனாமி பீதி ஏற்பட்டுள்ளது. 
 
டிசம்பர் 3 ஆம் தேதிக்குள் மீண்டும் சுனாமி பேரலைகள் உருவாகி தமிழகம் மற்றும் கேரளா பகுதிகளுக்கு ஆபத்து ஏற்படும் என கேரளாவை சேர்ந்தவர் எச்சரிக்கை விடுத்தார்.
 
இந்திய பெருங்கடலில் ஏற்படும் அதிபயங்கர நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் எழுந்து இந்தியாவில் தமிழக, கேரள கடலோர மாவட்டங்கள், சீனா, ஜப்பான், பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், தாய்லாந்து, இந்தோனேஷியா, இலங்கை ஆகிய நாடுகள் அழிவை சந்திக்கும் என செய்திகள் வெளியாகின. 
 
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயல் கடலோர மீனவ கிராமத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்ட டால்பின்கள் கரை ஒதுங்கி உயிருக்கு போராடியவாறு கிடந்தன. 
 
அப்பகுதி மீனவர்கள், மாலுமிகள் நாட்டுப்படகுகளில் சென்று அந்த டால்பின்களை கைகளால் பிடித்தும், கயிற்றால் கட்டியும் கடலுகுள் இழுத்து சென்று ஆழமான பகுதியில் விட்டனர். 
 
ஆனாலும் அந்த டால்பின்மீண்டும் கரை ஒதுங்கியவாறு இருந்தன. இதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் 4 டால்பின்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின. 
 
தமிழக கடலோர மாவட்டங்களில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி வரும் நிலையில், தற்போது டால்பின்கள் கரை ஒதுங்கிய சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலைக்கு முன்பும் இது போன்று சில பகுதியில் டால்பின்கள் கரை ஒதுங்கியதாக தெரிகிறது. தற்போது மேலும், இவ்வாறு நடப்பது சுனாமியின் அறிகுறியா என சந்தேகம் எழுந்துள்ளது.