வாஷிங் மெஷினில் இறந்த நிலையில் 3 வயது இரட்டையர்கள்!

Sasikala| Last Updated: ஞாயிறு, 26 பிப்ரவரி 2017 (11:58 IST)
டெல்லியில் சனிக்கிழமை மத்தியம் அவந்திகா அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் வாஷிங் மெஷினில் மூழ்கி மூன்று வயது  இரட்டை குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மாக்களிடையே பரபரப்பை ஏற்படித்தியிருக்கிறது.

 
 
முதல்மாடியில் வசித்து வரும் ராக்கி மற்றும் ரவீந்திரன் தம்பதியினரின் 3 வயது இராட்டைக் குழந்தைகள் லக்ஷ்,நீஷா பாத்ரூம்  அருகே விளையாடியுள்ளனர். இந்நிலையில் ராக்கி வாஷிங் மெஷினில் தண்ணீர் ஊற்றியுள்ளார். அது 15 லீட்டர்  அளவு  இருக்கக்கூடும் என தெரிகிறது. அவர் வாஷிங் பவுடர் வாங்க கடைக்குச் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது குழந்தைகள் வீட்டில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார்.
 
குழந்தைகளை தொலைத்த பதற்றத்தில் ராக்கி தனது கணவர் ரவீந்திரனுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, 10 நிமிடங்களில் வீட்டிற்கு வந்த ரவீந்திரனும் பல இடங்களில் குழந்தைகளை தேடினார். பின்னர் இரவு 11 மணியளவில் வாஷிங் மெஷினில் போட்ட துணிகளை எடுக்கும்போது குழந்தைகள் தலை தொங்கிய நிலையில் கிடந்ததைக் கண்டு பெற்றோர்கள்  அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 
பின்னர் உடனடியாக அருகில் உள்ள ஜெய்பூர் கார்டன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணையை துவங்கியுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :