1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 9 மே 2024 (09:14 IST)

சென்னையில் நாய் கடித்து பெண் ஒருவர் காயம்.. நாய்களால் ஏற்படும் தொடர் பிரச்சனைகள்..!

dogs
சென்னையில் தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களால் தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் இன்று சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவரையும் தெரு நாய் கடித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நுங்கம்பாக்கம் பூங்காவில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்த போது அவரை வளர்ப்பு நாய் கடித்ததாகவும் இதனை அடுத்து நாயின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் நேற்று சென்னை வேளச்சேரியில் சிறுவன் ஒருவனை நாய் கடித்து விட்டதாக கூறப்பட்ட நிலையில் இந்த  சம்பவத்திலும் நாயின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை சூளைமேடு பகுதியில் சாலையில் ஒரு பெண் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென அங்கு இருந்த தெரு நாய் ஒன்று கடித்ததாகவும் இதையடுத்து அவர் காயம் அடைந்ததாகவும் தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

சென்னையில் நாய்களால் தொடர் பிரச்சனை ஏற்பட்டு வருவதை அடுத்து தெரு நாய்களை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

Edited by Siva