செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 19 மே 2021 (17:06 IST)

திமுகவில் இணைகிறார் டாக்டர் மகேந்திரன்? வெயிட்டான பதவி என தகவல்!

சமீபத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் காட்சியிலிருந்து அக்கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் மகேந்திரன் அவர்கள் விலகினார் என்பது தெரிந்தது. மகேந்திரன் விலகலுக்கு பின் கமலஹாசன் காரசாரமான ஒரு அறிக்கை விட்டார் என்பதும் அதற்கு பதிலளிக்கும் வகையில் பல தொலைக்காட்சிகளில் டாக்டர் மகேந்திரன் பேட்டி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
டாக்டர் மகேந்திரனை அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பலர் விலகினார் என்பது இன்று கூட அக்கட்சியின் பொதுச்செயலாளர் முருகானந்தம் என்பவர் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய டாக்டர் மகேந்திரன் விரைவில் திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வந்துள்ளது. மேலும் திமுகவில் இணையும் அவருக்கு ஒரு பதவி மற்றும் பொறுப்பு தரப்பட்ட உள்ளதாகவும் இரண்டுமே வெயிட் ஆனது என்றும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது