புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 14 நவம்பர் 2024 (08:16 IST)

ஸ்டான்லி மருத்துவமனையில் இன்னொரு மருத்துவர் மீது தாக்குதல்: அதிர்ச்சி தகவல்..!

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில், மருத்துவர் பாலாஜிக்கு நேற்று கத்திக்குத்து சம்பவம் நடந்த நிலையில், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள மருத்துவரை, ஒரு நோயாளி தாக்கியதாக வெளிவந்திருக்கும் செய்தி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மனநல மருத்துவர் ஹரிஹரன் என்பவரை, அவரிடம் சிகிச்சை பெற்ற பரத் என்ற இளைஞர் நேற்று தாக்கியதாகவும், அதன் பின் அவர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியே வந்துள்ளன.

நீலாங்கரையைச் சேர்ந்த பரத் என்ற 24 வயது இளைஞர், மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு முதல் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை முடித்து வீடு திரும்பியபோது, திடீரென தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஹரிஹரனின் முகத்தில் குத்தி, அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலால், மருத்துவரின் கண்ணில் காயம் என்றும், உதடும் கிழிந்ததால், தையல் போடப்பட்டதாகவும், கூறப்படுகிறது.



Edited by Siva