1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Updated : புதன், 24 ஆகஸ்ட் 2016 (11:26 IST)

உங்க கிட்ட நாட்டுமாடு இருக்கா? உங்களுக்கு ரூ. 15000 பரிசு!

உங்க கிட்ட நாட்டுமாடு இருக்கா? உங்களுக்கு ரூ. 15000 பரிசு!

ஈரோடு, திண்டல் ஏ.இ.டி.,பள்ளி வளாகத்தில், செப்.,18ம் தேதி, ‘‘பாரம்பரியமிக்க நாட்டு மாடுகளை காப்போம்’’ என்ற தலைப்பில், நாட்டுமாடு கண்காட்சி மற்றும் பரிசளிப்பு விழா நடத்தப்பட இருக்கிறது.


 


இந்த கண்காட்சியில் பங்கேற்கும் நாட்டுமாடுகளில், சிறந்த மாடுகளை தேர்வு செய்து  பரிசுகள் வழங்க உள்ளனர். மாட்டின் தரத்திற்கேற்ப்ப, முதல்பரிசு ரூ 15000, இரண்டாம் பரிசு ரூ 10000, மூன்றாம் பரிசு ரூ 7,500 , நான்காம்பரிசு ரூ 5000 என வழங்கவுள்ளனர்.

தமிழகத்தின் பாரம்பரியம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாலும், இயற்கை குறைந்து செயற்கை அதிகரிப்பதாலும், நாட்டுமாடுகளை வளர்த்தெடுக்கும் நோக்கில் இந்த கண்காட்சி நடத்தபட உள்ளதாக கூறுகின்றனர்.