புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (12:09 IST)

ஒட்டன்சத்திரம் நகராட்சி: அனைத்து வார்டுகளிலும் திமுக வெற்றி

ஒட்டன்சத்திரத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளதால் அந்த பகுதியில் உள்ள திமுகவினர் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர் 
 
பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்று வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் ஒட்டன்சற்றம் நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ள நிலையில் அனைத்து வார்டுகளிலும் திமுக வெற்றி பெற்றதாகவும் அதிமுக உள்பட மற்ற கட்சிகள் ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது இந்த வெற்றிச் செய்தி திமுகவினர் பெரும் சந்தோசத்தை அளித்துள்ளது