1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 31 மார்ச் 2021 (20:26 IST)

ஆ ராசா பேச்சால் திமுகவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது: நடிகை விந்தியா

ஆ ராசாவின் சர்ச்சைக்குரிய பேச்சு காரணமாக அதிமுகவுக்கு ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கிடைக்காது என நடிகை விந்தியா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில் முதல்வரின் பிறப்பு குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார் ஆ ராசா. இந்த கருத்து காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டு நிலையில் ராசாவின் இந்த பேச்சால் அவரது கட்சி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள் என நடிகை விந்தியா பேசியுள்ளார் 
 
சாக்கடையில் இருந்து வந்தவர்கள் மேல் சந்தன வாசமா வீசும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இன்று ரிஷிவந்தியம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சந்தோஷ் என்பவரை ஆதரித்து பிரச்சாரம் செய்த நடிகை விந்தியா ’மோசமானவர்களில் முக்கியமானவர் ராசா என்று கடுமையாக விமர்சனம் செய்தார் 
 
கடந்த முறை தேர்தலில் திமுக வெற்றி பெற இயலாத நிலைக்கு தள்ளப்பட்டது காரணமே ராசாவின் ஊழல்தான் என்றும் இந்த முறையும் அவர்கள் தோல்வி அடைவதற்கு காரணமும் ராசாவின் வாய்தான் என்றும் இந்தியா கூறியுள்ளார்