வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 26 மே 2024 (13:33 IST)

வைகோவுக்கு என்ன ஆச்சு? சிகிச்சைக்காக தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விரைவு..!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதை அடுத்து சிகிச்சைக்காக தூத்துக்குடியில் இருந்து விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டதாகவும் துரை வைகோ தகவல் தெரிவித்துள்ளார்.
 
நாகர்கோவிலில் மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல் இல்ல திருமண விழாவில் பங்கேற்க இருந்த வைகோ, தனது வீட்டில் கீழே விழுந்து தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் விழாவில் பங்கேற்க இயலவில்லை என துரை வைகோ கூறியுள்ளார்.
 
மேலும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ள வைகோவுக்கு சிகிச்சை அளிக்க தூத்துக்குடியில் இருந்து விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டதாகவும் இன்னும் சில மணி நேரத்தில் சென்னை வரும் வைகோவுக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva