திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 12 பிப்ரவரி 2024 (07:06 IST)

திமுக அரசுக்கு அறிவு இல்லை.. நான் வரும்போது விளக்குகள் அணைக்கப்பட்டன: ஜேபி நட்டா

jp nadda
திமுக அரசுக்கு அறிவு இல்லை, நான் வரும் வழியில் கடைகள் எல்லாம் மூடப்பட்டிருந்தது, திமுகவினர் மிரட்டி கடைகளை மூட வைத்திருக்கிறார்கள், அதேபோல் நான் வரும்போது தெரு விளக்குகள் அழைக்கப்பட்டன’ என சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் நேற்று பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

மேலும் அவர் பேசியபோது ’சென்னையில் அதிக அளவு போலீசார் குவிக்கப்பட்டிருப்பதை பார்க்கும்போது எமர்ஜென்சி காலத்தை எனக்கு நினைவுபடுத்துகிறது. ஆனால் இது நீண்ட காலம் நீடிக்க போவதில்லை

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி வந்தால் திமுகவின் விளக்குகள் அணைக்கப்படும்.  தமிழ்நாட்டில் நடைபெறும் திமுக ஆட்சி மிக மோசமானது, ஆளும் திமுக ஆட்சிக்கு அறிவு இல்லை, திமுக அரசுக்கு மனசாட்சியும் இல்லை,  தமிழ்நாட்டை திசை திருப்பும் திமுகவின் தலைமையில் இந்த மாநிலம் இருந்து வருகிறது

இந்த மண்ணில் யாரெல்லாம் ஊழல் ஆட்சி செய்து வருகிறார்களோ, அவர்கள் எல்லாம் தூக்கி எறியப்படும் நாள் விரைவில் வந்துகொண்டு இருக்கிறது. ஊழல் அரசை, ஊழல் அரசியல்வாதிகளை மக்கள் தூக்கி எறிவார்கள் என்று பேசினார் அவரது பேச்சு பரபரப்பு ஏற்படுத்தியது.

Edited by Siva