1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 28 பிப்ரவரி 2021 (07:59 IST)

வாக்களிக்க பணம் கொடுத்தால் வாங்காதீர்கள்: நீதிபதி கிருபாகரன்

வாக்களிக்க பணம் கொடுத்தால் வாங்காதீர்கள்: நீதிபதி கிருபாகரன்
தேர்தலின்போது அரசியல் கட்சிகள் பணம் கொடுத்தால் வாங்காதீர்கள் என நீதிபதி கிருபாகரன் அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது பொதுமக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார் 
 
திருப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அவர்கள் கூறியபோது ’இயற்கை மாசுகளை விட மக்களின் மனம் மாசு அடைந்து இருக்கிறது என்றும் ஓட்டுக்கு பணம் பெற்று விட்டால் அது அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் தவறை மறைக்க காரணமாக அமைந்துவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தின் போது பொதுமக்களிடம் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் அந்த பணத்தை பொதுமக்கள் வாங்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். நீதிபதி கிருபாகரன் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ஆனால் தேர்தல் அறிவிப்பு வெளியான நாளே ஓட்டுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுக்க ஆரம்பித்துவிட்டதாகவும், பொதுமக்களும் அதை வாங்கி வருவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.