புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 15 அக்டோபர் 2019 (13:26 IST)

’ஜெயலலிதா இருந்தவரை இப்படி நடந்ததில்லை”..ஸ்டாலின் ஆதங்கம்

ஜெயலலிதா இருந்தவரை அவர் மத்திய அரசுக்கு அடி பணிந்து போனதில்லை என தற்போதைய அதிமுக ஆட்சியை குறித்து ஆதங்கம் பொங்க பேசியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி, சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,பிரச்சாரங்கள் சூடுபிடித்து வருகின்றன. இந்நிலையில் நாங்குநேரி தொகுதியில் திமுக சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின்  பிரச்சாரம் செய்தார்.

அதில், ஜெயலலிதா இருந்தவரை அடிபணிந்து போனதில்லை. ஆனால் தற்போது ஹிந்தி திணிப்பு, சமஸ்கிரத திணிப்பு போன்ற முயற்சிகள் நடைபெறுகிறது” என கூறினார்.

மேலும், சொத்தில் பெண்ணுக்கு சம உரிமை, தாலிக்கு தங்கம், கர்ப்பிணி பெண்களுக்கான உதவித் தொகை இவையெல்லாம் கலைஞர் கொண்டு வந்த திட்டங்கள் எனவும் கூறினார். முன்னதாக பிரச்சாரம் செய்த போது, மக்களை பற்றி சிந்திக்காத ஆட்சி தான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனவும், திமுக ஆட்சிக்கு வந்தால் தான் விவசாயிகளும் பெண்களும் மேம்பாடு அடைய முடியும் எனவும் கூறியது குறிப்பிடத்தக்கது.