பிரியாணியில் பேண்ட் ஐட்: சர்ச்சையில் பாரம்பரிய ஹோட்டல்!

Last Updated: செவ்வாய், 28 மே 2019 (18:06 IST)
பாரம்பரிய ஹோட்டலான தலப்பாக்கட்டு பிரியாணி கரூர் கிளையில் பரிமாரப்பட்ட பிரியாணியில் பேண்ட் ஐட் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஈரோட்டை சேர்ந்த ஒருவர் தனது நண்பர்களுடன் கரூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள தலப்பாக்கட்டு பிரியாணி கடையில் பிரியாணி ஆடர் செய்து சாப்பிட்டுக்கொண்டிருந்த போது அதில் ரத்தகறையுடனான பேண்ட் ஐட் ஒன்றை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
இது குறித்து அங்கிருந்த ஊழியர்களிடம் கேட்ட போது அவர்கள் சரியாக பதில் அளிக்கவில்லை. எனவே உடனடியாக உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு புகார் அளிகப்பட்டது. 
 
விரைந்த் வந்த அதிகாரிகள் அந்த கடையில் சோதனை மேற்கொண்டனர். வாடிக்கையாளர்களிடம் உணவின் தரத்தை குறித்தும் கேட்டுக்கொண்டனர். அங்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பது உறுதியானது. 
 
ஆனால் இந்த உணவு திண்டுக்கல் கடையில் தயார் செய்யப்பட்டது என்பதால் அங்கு சோதனை மேற்கொண்டு விளக்கம் அளிக்கும்படி உத்தவிடப்பட்டுள்ளது. 

Video link 


இதில் மேலும் படிக்கவும் :