செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 25 ஜூன் 2019 (16:11 IST)

மீண்டும் வன்முறையில் இறங்கிய திமுகவினர் – நட்சத்திர ஹோட்டலில் அட்டூழியம் !

கேளம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் திமுகவினர் கலந்துகொண்ட மதுவிருந்தின் முடிவில் ஹோட்டலை சேதப்ப்டுத்தியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கேளம்பாக்கத்தில் இயங்கி வரும் சதன் நட்சத்திர ஹோட்டலில் திமுக பிரமுகர் எக்ஸ்பிரஸ் எல்லையப்பன் என்பவரின் பிறந்தநாள் விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான திமுக உறுப்பினரகள் கலந்துகொண்டதாகத் தெரிகிறது. பிறந்தநாள் விழாவின் ஒருப் பகுதியாக மது விருந்தும் கொடுக்கப்பட்டுள்ளது. மதுவின் போதையில் ஒரு கட்டத்தில் விருந்துக்கு வந்தவர்களுக்குள்ளாகவே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ஒருக் கட்டத்தில் சலசலப்புக் கைகலப்பாக மாறவே ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ள தொடங்கினர். இதனால் பதற்றமான ஹோட்டல் நிர்வாகத்தினர் அவர்களை சமாதானப்படுத்த முயன்றுள்ளனர்.  ஆனால் அவர்களையும் மீறி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ள ஆரம்பித்துள்ளனர். இதனால் ஹோட்டலில் இருந்த கண்ணாடிப் பொருட்கள் , ஜன்னல், கதவு மற்றும் பெயர்ப்பலகைகளை உடைந்து நொறுக்கியுள்ளன. இதனையடுத்து நிர்வாகம் அளித்த புகாரின்  அடிப்படையில் சம்மந்தப்பட்டவர்கள் மேல் போலிஸ் புகார் பதிவு செய்துள்ளது.

ஏற்கனவே பிரியாணிக் கடையிலும், பியூட்டிப் பார்லரிலும் திமுக பிரமுகர்கள் வன்முறையில் ஈடுபட்டது அக்கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.