செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 23 ஜூலை 2019 (08:53 IST)

ஆட்டை பலி கொடுக்கும் இடத்தில் வெட்டி கொல்லப்பட்ட திமுக பிரமுகர்: பின்னணி என்ன?

தூத்துக்குடியின் தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்த விஎஸ் கருணாகரன் என்பவர் ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
தூத்துக்குடியை சேர்ந்த விஎஸ் கருணாகரன் பாஜக, பிறகு, அதிமுக, அதன் பின்னர் திமுக என அனைத்து கட்சிகளிலும் இருந்துள்ளார். முதலில் முன்னாள் எம்எல்ஏ பெரியசாமியின் ஆதரவாளர் இருந்த இவர் அவரது மறைவிற்கு பின்னர் அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளராக இருந்துள்ளார். 
 
இந்நிலையில், தன்னுடைய அப்பாவிற்கு அஞ்சலி செலுத்த  சமாதிக்கு இவர் சென்றார். அப்போது ஒரு மர்ம கும்பல் இவரை மடக்கி பிடித்து கொல்ல முயற்சித்துள்ளது. அவர்களிடம் இருந்து தப்பிய ஓடிய இவர் கடைசியில் ஆடுகளை பலி கொடுக்கும் இடத்தில் சிக்கியுள்ளார். 
 
அப்போது அங்கேயே கருணாகரனை சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளனர். தொழில், கோயில் திருவிழா நடத்துவது மற்றும் அரசியல் என பல போட்டிகள் காரணமாக இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.