1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 7 மே 2016 (17:11 IST)

மூன்றாவது அணி இல்லை இது கருணாநிதி; திமுக தான் மூன்றாவது அணி இது வைகோ!

சில தினங்களுக்கு முன் மூன்றாவது அணி என்ற ஒன்று இல்லை என்று சொன்னார் திமுக தலைவர் கருணாநிதி. இதற்கு பதில் அளித்துள்ளார் தற்போது மூன்றாவது அணியாக கருதப்படும் மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ.


 
 
சென்னையில் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த வைகோவிடம், தமிழகத்தில் 3-வது கட்சி என்ற ஒன்று இருப்பது தெரியவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
 
இதற்கு பதில் அளித்த வைகோ, வரும் தேர்தலில் திமுக கட்சி தான் 3-வது அணியாகப் போகிறது என்பது அக்கட்சியின் தலைவர் கருணாநிதிக்கே தெரியாது என்றார். மேலும் இந்த தேர்தலில் மக்கள் நல கூட்டணி தான் வெற்றி பெறும் என்றும், அதிமுக இரண்டாவது இடத்தையும், திமுக மூன்றாவது இடத்தையும் பிடிக்கும் என்றார் வைகோ.