1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 9 அக்டோபர் 2023 (11:41 IST)

சமூகநீதியை திமுக அரசு செயலில் காட்ட வேண்டும்! – முதல்வரை சந்தித்த அன்புமணி ராமதாஸ்!

Anbumani
வன்னியர் சமூகத்திற்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார்.



வன்னியர் சமூகத்தினருக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பாமக நீண்ட நாளாக பேசி வந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் இந்த இட ஒதுக்கீட்டிற்கான தீர்மானம் சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பின் முறையான கணக்கெடுப்பு இல்லாமல் இந்த இட ஒதுக்கீட்டை செயல்படுத்த முடியாது என தெரிவித்தது.

இந்நிலையில் இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “வன்னியர் இட ஒதுக்கீடு என்பது சாதிய பிரச்சினை அல்ல சமூக நீதி பிரச்சினை. 10.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் பேசி முடுவெடுப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பிற்கும் வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கும் சம்மந்தம் இல்லை. நாங்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால்தான் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க முடியும். சமூக நீதி பேசும் திமுக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியே ஆக வேண்டும்” என கூறியுள்ளார்.

Edit by Prasanth.K