Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செயல் தலைவர் விவகாரம் - மறுப்பு தெரிவித்த திமுக

Updated: புதன், 31 ஜனவரி 2018 (14:59 IST)
எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை திமுக செயல் தலைவர் என்றே அழைக்க வேண்டும் என முரசொலியில் செய்தி வந்ததாக வெளியான செய்தியில் உண்மையில்லை என திமுக தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

 
இன்று காலை ஒரு சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவியது. திமுக சார்பில் வெளியான அறிக்கை, முக்கிய அறிவிப்பு என்கிற தலைப்பில் வந்த அந்த செய்தியில் ‘முரசொலி-யில் இன்று (31.01.2018) முதல் அனைத்து செய்திகள் மற்றும் விளம்பரங்களில் கழக செயல் தலைவர் அவர்கள் என்றே குறிப்பிடப்பட வேண்டும். தளபதியின் பெயர் இடம் பெறக்கூடாது” என கூறப்பட்டிருந்தது.
 
இதனையடுத்து, சில ஊடகங்கள் அவ்வாறே குறிப்பிடத் தொடங்கின. இந்த செய்தி சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவியது.
 
இந்நிலையில், இப்படி செய்தி எதுவும் வெளியிடவில்லை என திமுக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள செய்தியில், முரசொலி வெளியிடாத ஒரு செய்தியை, வெளியிட்டதாக சில நாளிதழ்கள் விஷமத்தனமான பொய்ச் செய்தியினை வேண்டுமென்றே வெளியிட்டுள்ளன. இதுபோன்ற செய்தியை திமுகவோ, முரசொலியோ வெளியிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

எல்லாம் காட்டு

டாஸ்மாக்கில் இனிமே ரூ.10 எக்ஸ்ட்ரா வாங்கமாட்டோம்!.. சங்க மாநில தலைவர் பேட்டி...

டாஸ்மாக் முறைகேடு!.. செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு!..

எதிர்காலத்தில் திமுகவை வழிநடத்த தகுதியானவர் யார்? கனிமொழியா? உதயநிதியா? சர்வே முடிவு

7000 கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று.. அனைத்து கல்லூரிகளிலும் பரிசோதனை செய்ய முடிவு...

விஜய்க்கு ஹெலிகாப்டர் ரெடியா இருக்கு!.. வந்து பார்க்கட்டும் - டி.கே.சிவக்குமார்!...

அடுத்த கட்டுரையில்
Show comments