1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 27 பிப்ரவரி 2017 (09:15 IST)

ஜெயலலிதாவை திட்டமிட்டு சதி செய்து கொன்றது யார் தெரியுமா?: இது என்னப்பா புது கதையா இருக்கு!

ஜெயலலிதாவை திட்டமிட்டு சதி செய்து கொன்றது யார் தெரியுமா?: இது என்னப்பா புது கதையா இருக்கு!

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மரணத்திற்கு திமுகவின் சதியே காரணம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.


 
 
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் தினமும் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக எதிர்க்கட்சியான திமுக உட்பட பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் அவரது மரணத்தின் மர்மத்தை போக்கி நாட்டு மக்களுக்கு தெளிவு கிடைக்க அவரது மரணம் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுபெற்று வருகிறது.
 
இந்நிலையில் அவரது மரணத்திற்கு திமுகவின் சதிதான் காரணம் என அதிமுக எம்பி தம்பிதுரை கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை கூறியுள்ளார்.
 
அப்போது பேசிய அவர், அதிமுகவை ஒழிப்பதற்காக மறைமுகமாக சதித்திட்டங்களை திமுகவினர் திட்டமிட்டு செயல்படுத்துகிறார்கள். ஜெயலலிதாவின் மீது எந்தவித குற்றமும் கிடையாது. வேண்டுமென்றே அவர்கள் மீது பழிசுமத்தி அவரை திமுகவினர் சிறைக்கு அனுப்பினர்.
 
சிறைக்கு சென்றால் தான் குறுகிய காலத்திலேயே ஜெயலலிதா இறந்துவிடுவார் என திட்டமிட்டனர். திமுக செய்த சதியால் தான் ஜெயலலிதா இறந்தார். அவர்கள் தான் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணம் என்றார்.