1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 25 மே 2016 (15:31 IST)

கண்ணீர்விட்டு கதறி அழுத கருணாநிதி?

கண்ணீர்விட்டு கதறி அழுத கருணாநிதி?

திமுக தலைவர் கருணாநிதி கண்ணீர் விட்டு கதறி அழுத தகவல் அறிந்த தொண்டர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.


 

தமிழக சட்டமன்றத் தேர்தலில், திமுக மாவட்ட ரீதியாக பிரித்துள்ள மாவட்டத்திலும்  2 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் கட்டாயம் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என திமுக தலைமை மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டது.
 
திமுக தலைமை கணக்குப்படி, சுமார் 130 தொகுதிகளில் வெற்றிக்கனியை பறிக்க திமுக திட்டமிட்டது. ஆனால், மாவட்டச் செயாலளர்களின் மோசமான செயல்பாடுகளால், திமுக 89 இடங்களை மட்டுமே பெறமுடிந்தது.
 
இதனால், தோல்வியை தழுவிய வேட்பாளர்கள் பலர் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் பார்த்து தங்களது தோல்விக்கான காரணத்தை கூறி புகார் தெரிவித்துவருகின்றனர்.
 
இதேபோல கோவை பகுதியில் போட்டியிட்ட மீனா லோகு என்ற பெண் வேட்பாளர், தனக்கு திமுக மாவட்ட செயலாளர் வீரகோபால் ஒதுத்துழைக்கவில்லை என்றும், தனது தோல்விக்கு திமுக நிர்வாகிகளும் ஒரு காரணம் என கூறி, அழுது புலம்பியுள்ளார். இதே போல, தமிழகமும் மழுக்க திமுக நிர்வாகிகள் செய்த உள்ளடி வேலைகள் குறித்த புகார் மலைபோல் தினமும் குவிந்த வண்ணம் உள்ளதாம்.
 
இதைக் கேட்ட திமுக தலைவர் கருணாநிதி ஒரு கணம் அதிர்ந்துப் போய் தன்னை அறியாமலே கண்ணீர் விட்டாராம். இதை அருகில் இருந்தவர்கள் பார்த்து பதறிப்போய், தலைவரே.. கலங்காதீங்க, உங்க கண்ணில் கண்ணீர் வந்தால், எங்க கண்ணில் ரத்தம் வரும் என உருகி மனம் வெடித்துள்ளனர். இதனையடுத்தே அவர் ஆறுதல் அடைந்தாராம்.