1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 8 மே 2017 (10:49 IST)

திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களை சந்திக்கிறார்: வைர விழாவில் பங்கேற்பு!

திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களை சந்திக்கிறார்: வைர விழாவில் பங்கேற்பு!

திமுக தலைவர் கருணாநிதி வரும் ஜூன் மாதம் 3-ஆம் தேதி தொண்டர்களை சந்திக்கிறார் என திமுக அமைப்புச்செயலாளரும் எம்பியுமான எஸ்.ஆர்.பாரதி தெரிவித்துள்ளார்.


 
 
திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட அவர் தொடர்ந்து ஓய்வில் இருந்து வந்தார். இதனால் அவரை தொண்டர்கள் யாரும் சந்திக்க வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் நடந்தது. தமிழக அரசியலில் குழப்பமான சூழல் நிலவியபோதும் கூட திமுக தலைவர் கருணாநிதியால் உடல் நலக்குறைவால் தீவிர அரசியலில் இறங்க முடியவில்லை.
 
இதனால் திமுக தொண்டர்கள் மட்டுமில்லாமல், தமிழக மக்கள் கூட இந்த நேரத்தில் திமுக தலைவர் கருணாநிதி இருந்திருந்தால் நிலமை வேறு மாதிரி இருந்திருக்கும், அவரது பங்களிப்பு இந்த சூழலில் வேண்டும் என கருதினர்.
 
இந்நிலையில் அவரது 94-வது பிறந்த நாள் விழா வர உள்ளதை அடுத்து அவர் தொண்டர்களை சந்திக்க உள்ளதாக திமுக சார்பில் கூறப்பட்டுள்ளது. 10 மாதத்திற்கு பின்னர் திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களை சந்திக்க உள்ளதால் திமுகவினர் உற்சாகமடைந்துளனர்.
 
வரும் ஜூன் மாதம் 3-ஆம் தேதி அவர் தொண்டர்களை சந்திக்க உள்ளதாகவும். ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ள வைர விழாவிலும் அவர் கலந்துகொள்ள உள்ளதாகவும் திமுக அமைப்பு செயலாளர் எஸ்.ஆர்.பாரதி கூறினார்.