1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 மார்ச் 2024 (12:24 IST)

மக்களவை தேர்தல் - திமுக vs அதிமுக நேரடியாக மோதும் தொகுதிகள்

eps stalin
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
குறிப்பாக நேற்று திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டது என்பதும் அதேபோல் நேற்றும் இன்றும் அதிமுக போட்டியிடும் தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர் அறிவிப்பிற்கு பின் இரு கட்சிகளும் நேரடியாக 18 தொகுதிகளில் மோதுகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் மோதும் தொகுதிகளின் பட்டியல் இதோ:
 
▪️ வடசென்னை
▪️ தென்சென்னை
▪️ ஸ்ரீபெரும்புதூர்
▪️ காஞ்சிபுரம்
▪️ அரக்கோணம்
▪️ வேலூர்
▪️ தர்மபுரி
▪️ திருவண்ணாமலை
▪️ ஆரணி
▪️ கள்ளக்குறிச்சி
▪️ சேலம்
▪️ ஈரோடு
▪️ நீலகிரி
▪️ கோவை
▪️ பொள்ளாச்சி
▪️ பெரம்பலூர்
▪️ தேனி
▪️ தூத்துக்குடி
 
Edited by Mahendran