தம்பி கேப் விட்டு நில்லுப்பா.. சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நாய்! – வைரலாகும் புகைப்படம்!

Dog
Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 11 ஏப்ரல் 2021 (10:24 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் சமூக இடைவெளி கடைபிடிக்கும் நாயின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் மாவட்ட நிர்வாகங்களும் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் என பல விதிமுறைகளை கட்டாயப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் சமூக இடைவெளியை கடைபிடித்தலின் அவசியம் குறித்து நாய் ஒன்றின் புகைப்படம் வைரலாகி வருகிறது. ஈரோட்டில் இறைச்சி கடை ஒன்றில் நாய் ஒன்று வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியோடு நிற்க வரையப்பட்டுள்ள வட்டத்தில் நின்று கொண்டுள்ளதாக அந்த புகைப்படம் உள்ளது.இதில் மேலும் படிக்கவும் :