செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 16 செப்டம்பர் 2019 (08:44 IST)

ஒத்த வசனம் பேசி கெத்து காட்டிய விஜயகாந்த்! ஆடிப்போன தொண்டர்கள்!

ஒத்த வசனம் பேசி கெத்து காட்டிய விஜயகாந்த்! ஆடிப்போன தொண்டர்கள்!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அடுத்த பொதுக்கூட்டத்தில் 1 மணி நேரம் பேசுவேன் என தனது தொண்டர்களுக்கு உறுதியளித்துள்ளார். 
 
திருப்பூரில் தேமுதிக முப்பெரும் விழா நேற்று நடைபெற்றத்து. இந்த விழாவில் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜய பிரபாகரன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்த விழாவில் விஜயகாந்த் பேசுவாரா என அவரது தொண்டர்கள் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர். 
 
தொண்டர்களின் எதிர்ப்பார்ப்பை ஏமாற்றம் விஜயகாந்த், ஒருநாள் ஒரு பொழுதாவது எனக்கும் விடியும். அப்பொழுது நான் உங்களை தங்க தொட்டிலில் வைத்து தாலாட்டுவேன். அடுத்த பொதுக்கூட்டத்தில் நான் 1 மணி நேரம் பேசிவேன் என தெரிவித்தார். 
ஒத்த வசனம் பேசி கெத்து காட்டிய விஜயகாந்த்! ஆடிப்போன தொண்டர்கள்!
விஜயகாந்தின் இந்த பேச்சை கேட்டு தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், விஜயகாந்த் கூறியது போல விடியல் எப்பொழுது வரும் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் உள்ளது என்பதே நிதர்சனம். 
 
தேமுதிகவின் இந்த முப்பெரும் விழாவில் திருப்பூர் முழுவதும் பேனர்கள் வைத்து இருந்தது நெருடலான ஒன்றாக இருந்தது.