ஆர்.கே.நகர் தொகுதிக்கு அட்ரஸ் கேட்டு நிற்கும் சில அரசியல் தலைவர்கள்!!
2016 சட்டசபைத் தேர்தல் காணாமல் போன கட்சிகளாக தேமுதிக, பாமகவை முக்கியமாக குறிப்பிடலாம். மதிமுக போட்டியிடாமல் ஒதுங்கி விட்டது.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ஏப்ரல் 12 ஆம் தெதி நடைபெரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த கட்சிகள் என்ன செய்யயும் என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இடைத்தேர்தகில் போட்டியிட்டாலும் டெபாசிட்டாவது மிஞ்சுமா என்ற அச்சம் கட்சிக தொண்டர்களிடம் நிலவுகிறது.
மக்களால் அறவே ஒதுக்கப்பட்ட தலைவர்களாக மாறியுள்ளனர் வைகோவும், விஜயகாந்த்தும். மறுபக்கம் பாமக பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தது. ஆனால் மக்கள் அவர்களை இந்த முறையும் ஏற்கவில்லை.
இப்படி மக்களால் நிராகரிக்கப்பட்ட இவர்கள் ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள் என் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அரசியல் களத்தில் நாங்கள் இன்னும் இருக்கிறோம் என்பதை காட்ட வேண்டும் என்பதற்காக இடைத் தேர்தலில் போட்டியிட்டு ஆக வேண்டிய சூழ்நிலையும் உருவாகக்கூடும்.