வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2024 (15:57 IST)

அண்ணா அறிவாலயம் போல் கேப்டன் ஆலயம்.. தேமுதிக தலைமை அலுவலகத்தின் பெயர்..!

Premalatha
திமுக தலைமை அலுவலகத்திற்கு அண்ணா அறிவாலயம் என்று பெயர் வைக்கப்பட்டது போல் தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு கேப்டன் ஆலயம் என்று பெயர் வைக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் 72 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்ட நிலையில் கட்சியின் தொண்டர்கள் அவருடைய சமாதிக்கு மாலை மரியாதை செய்தனர். குறிப்பாக விஜயகாந்த் மனைவியும் தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா, தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் சிலையை திறந்து வைத்தார்.

அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது ’தேமுதிக தலைமை அலுவலகத்தின் பெயர் இனிய கேப்டன் ஆலயம் என அழைக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் புதிதாக கட்சிக்கு என ஒரு பிரத்யேக யூடியூப் சேனல் தொடங்கப்பட இருப்பதாகவும் அவர் கூறினார். அந்த சேனலில் தேமுதிக நிகழ்ச்சிகள், கொள்கைகள் ஆகியவை ஒளிபரப்பாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் பிறந்த நாள் நிகழ்ச்சியில்  திரை உலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva