திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : வியாழன், 3 அக்டோபர் 2019 (18:26 IST)

டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் ! தமிழக அரசு அறிவிப்பு ...ஊழியர்கள் குஷி !

தமிழகத்தில்  மதுபான விற்பனை  நாள்தோறும் கல்லா கட்டி வருகிறது. ’குடிமகன்’களுக்காகவே மாநிலத்தின் பல்வேறு இடங்களில் டாஸ்மாக்குகள் அரசால் நடத்தப்பட்டு வருகிறது. அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அரசே சம்பளம் அளித்து வருகிறது.இந்நிலையில், தமிழக அரசு, டாஸ்மாக்கில் பணிபுரியும் ஊழியர்களுக்கு  20% போனஸ் அறிவித்துள்ளது 
வரும் தீபாவளி பண்டிகையொட்டி டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனால் தமிழகமெங்கும் பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள அறிவிப்பில்,'டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும். உதவி விற்பனையாளர்களுக்கு ரு. 16 300 மற்ற பணியாளர்களுக்கு ரூ. 16,800 போனஸ் வழங்கப்படும் 'என தெரிவித்துள்ளது.