1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 15 அக்டோபர் 2018 (20:08 IST)

நல்லக்கண்ணுவுடன் சந்திப்பு: கம்யூனிஸ்ட் கட்சியில் சேருகிறாரா திவ்யாசத்யராஜ்?

மூத்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்லக்கண்ணு அவர்களை பிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் சந்தித்திருப்பதால் அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரப்போவதாக கூறப்படுகிறது.

திவ்யா சத்யராஜ் ஒரு ஊட்டச்சத்து நிபுணர். தற்போது அவர் ஊட்டச்சத்து குறித்த ஆராய்ச்சி படிப்பை படித்து வருகிறார். மேலும் உலகின் மிகப்பெரிய மதிய உணவு திட்ட அமைப்பான 'அக்சய பாத்திரம்' என்ற அமைப்பின் பிராண்ட் அம்பாசிடராக உள்ளார். தமிழக குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தேவை என பிரதமர் மோடிக்கும் கடிதம்  எழுதியுள்ள திவ்யா, தமிழக அமைச்சர்களை இதுகுறித்து சந்தித்து ஆலோசனை செய்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு அவர்களை திவ்யா சந்தித்து பேசினார். இதனால் அவர் அக்கட்சியில் இணைய போவதாக வதந்திகள் பரவியது. ஆனால் தான் மரியாதை நிமித்தமாக நல்லக்கண்ணு அய்யாவை சந்தித்ததாகவும், கம்யூனிஸ்ட் கட்சி தனது அபிமான கட்சியாக இருந்தாலும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். திவ்யாவின் தந்தை சத்யராஜ் தீவிரமான திராவிட கழகத்தின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.