வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (14:24 IST)

மதுரை அதிமுக மாநாட்டிற்கு வந்தவர்களுக்கு ரூ.100, ரூ.500 பணம் விநியோகமா?

money
மதுரையில்  நேற்று  அதிமுக மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.  இந்த மாநாட்டில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 51 அடி உயர கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்தார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த மாநாட்டிற்கு 3  இலட்சம்  அதிமுக தொண்டர்கள் வருகை தந்திருந்ததாக தகவல் வெளியாகிறது.

இந்த  மநாட்டிற்கு முன்பு, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ரஜினி ரசிகர்களை  மதுரை மாநாட்டிற்கு வரவழைக்க, ஜெயிலர் பட டிக்கெட்டிகள் இலவசமாக வழங்கியிருந்தார். இது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில்,  மதுரை அதிமுக மாநாட்டிற்கு வந்தவர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டதாக தகவல் வெளியாகிறது.

இந்த மாநாட்டிற்கு வந்தவர்களுக்கு ரூ.100, ரூ 100 ஆகியவகை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த மாநாட்டிற்கு வந்த தொண்டர்களுக்கு தயாரிக்கப்பட்ட புளியோதரை வேகாததாலும், ருசியாக இல்லாததாலும், தொண்டர்கள் சாப்பிடவில்லை என தெரிகிறது. அவை டன் கணக்கில் கீழே கொட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.