1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 4 ஏப்ரல் 2017 (11:47 IST)

தோல்வி பயம் ; தேர்தலை நிறுத்த நினைக்கிறாரா தினகரன்?

ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத் தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.


 

 
வருகிற ஏப்ரல் 12ம் தேதி, ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, ஓ.பி.எஸ் அணி வேட்பாளர் மதுசூதனன், தினகரன், தீபா, திமுக வேட்பாளர் மருது கணேஷ், பாஜக வேட்பாளர் கங்கை அமரன் ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்நிலையில், தினகரன் மீது ஓ.பி.எஸ் அணியும், ஓ.பி.எஸ் அணி மீது தினகரன் தரப்பும் மாறி மாறி புகார்களை கூறிவருகிறார்கள். சமீபத்தில் இரட்டை மின் கம்பம் சின்னத்தை, ஓ.பி.எஸ் அணியினர் இரட்டை இலை சின்னத்தை போல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என தினகரன் தரப்பு தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்தது. 
 
அதனையடுத்து இதுபற்றி விளக்கம் அளிக்க மதுசூதனனுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு பதிலளித்த மதுசூதனன் இரட்டை மின் கம்பம் சின்னத்தை தான் தவறாக பயன்படுத்த வில்லை எனவும், தினகரன் தரப்புதான் பிரச்சாரத்தின் போது இரட்டை இலை சின்னத்தையும், அதிமுக கட்சி பெயரையும் தவறாக பயன்படுத்தி வருவதாக புகார் அளித்திருந்தர். மேலும், அதிமுக அதிகார இணையதளத்தை தினகரன் தனது பிரச்சாரத்திற்கு தவறாக பயன்படுத்தி வருவதாகவும் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து விளக்கம் கேட்டு தேர்தல் கமிஷன் தினகரனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
இந்நிலையில், தோல்வி பயம் காரணமாக ஆர்.கே.நகரில் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி அங்கு தேர்தலை நிறுத்த  தினகரன் அணியினர்  முயற்சி செய்வதாக ஓ.பி.எஸ் அணி சாரிபில் மைத்ரேயன் எம்.பி. தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியிடம் புகார் அளித்துள்ளார். 
 
இந்த விவகாரம் இரு அணியினர் தரப்பில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.