1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Dinakaran said about new party

நீ என்ன சேர மாட்டேன்னு சொல்றது, நான் உன்ன சேர்த்துக்க மாட்டேன்: தங்க தமிழ்ச்செல்வனுக்கு தினகரன் பதிலடி!

தினகரன்
உள்ளாட்சி தேர்தலுக்காக டிடிவி தினகரன் கட்சி ஆரம்பித்தால் அந்த கட்சியில் நான் சேரமாட்டேன் என தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக இன்று டிடிவி தினகரன் பேசியுள்ளார்.
 
கரூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், 90 சதவீத தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர். கட்சியை வழி நடத்தும் கடமை எங்களுக்குதான் உள்ளது. நாங்கள் அதிமுக அம்மா அணி என்ற பெயரில் செயல்பட உள்ளோம். அதற்காக நீதிமன்றத்தை அனுகவுள்ளோம்.
 
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு முடிவுக்கு வந்த பின்னர் தான் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அலோசிக்க முடியும். அதில் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என தீர்ப்பு வந்தால், தங்க தமிழ்ச்செல்வன் மட்டுமல்ல செந்தில் பாலாஜி உள்ளிட்ட அனைவரும் எங்கள் கட்சியில் சேர முடியாது என விளக்கம் அளித்தார் தினகரன்.
அடுத்த கட்டுரையில்
சரத்புரபுவின் உடலில் காயங்கள் : கொலை செய்யப்பட்டாரா?