திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (18:26 IST)

இனி பிரேக்கிங் நியூஸே நான்தான்: பிள்ளையார் சுழி போட்ட தினகரன்!

ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ தினகரன் அடுத்து நடவிருக்கும் திருபரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு ரெடியாகி வருகிறார். இந்த இடைத்தேர்தலுக்கு அவர் ஜெயலலிதா ஸ்டைலில் காய் நகர்த்துவதாக தெரிகிறது. 

 
ஆம், ஜெயலலிதாவின் முக்கிய பலமாக இருந்தது ஜெயா டிவி. இதுதான் மக்களிடம் அவரை நெருக்கமாக கொண்டு சென்று சேர்த்தது. தற்போது இதே பாலிசியை தினகரன் பின்பற்ற உள்ளாராம். 
 
எனவே, முதற்கட்ட பணியாக ஜெயா டிவியை மறு கட்டமைப்பு செய்வதில் இறங்கியுள்ளாராம் தினகரன். ஜெயலலிதா இருந்த போது நிர்வாகத்தின் சில நெருக்கடிகளால் முக்கிய தலைமை பணியாளர்கள் ஜெயா டிவியை விட்டு வெளியேறினர். 
 
தற்போது இவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளாராம் தினகரன். இனி பிரேக்கிங் நியூஸே என்னப்பத்திதான் இருக்கனும் எனவும் வெளிப்படையாக கூறினாராம் தினகரன்.