செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 30 டிசம்பர் 2017 (11:46 IST)

மௌனம் கலைத்த எடப்பாடி: ஆயிரம் தினகரன் வந்தாலும் ஒன்றும் செய்துவிட முடியாது!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கோயம்புத்தூர் சென்ற போது செய்தியாளர்கள் சந்திப்பில் தினகரன் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறி தனது மௌனத்தை கலைத்துள்ளார்.
 
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை சுயேட்சையாக களம் இறங்கி வீழ்த்தினார் டிடிவி தினகரன். அதன் பின்னர் அவர் கடந்த சில தினங்களாக இன்னும் மூன்று மாதங்களில் இந்த ஆட்சி மாறும் என கூறி வருகிறார். ஆனால் இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எந்த பதில் கருத்தும் கூறாமல் மௌனம் காத்து வந்தார்.
 
இந்நிலையில் நேற்று தனது மௌனத்தை கலைத்து கோவையில் பேட்டியளித்துள்ளார். அதில், தினகரனைப் போல ஆயிரம் தினகரன் வந்தாலும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒன்றும் செய்துவிட முடியாது. எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது. அவர்கள் கட்சியின் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள் எனவும் கூறினார்.