திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 14 டிசம்பர் 2016 (18:35 IST)

சென்னையில் டீசல் தட்டுபாடு: பெட்ரோல் பங்குகளில் அலைமோதும் கூட்டம்

வர்தா புயலால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டீசல் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது.


 

 
வர்தா புயலால் சூறைக்காற்று வீசியதில் சென்னை முழுவதும் சாலைகளில் இருந்த மரங்கள் சாய்ந்தன. சென்னை கும்மிடிப்பூண்டி சாலையில் சாய்ந்த மரங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, குறைந்த அளவு டேங்கர் லாரிகள் மட்டுமே நேற்று இயக்கப்பட்டது.
 
அதனால் பெட்ரோல் மட்டுமே எண்ணெய் நிறுவனங்கள் விநியோகம் செய்தது. சென்னையில் பெட்ரோல் தட்டுப்பாடின்றி கிடைத்து வருகிறது. ஆனால் டீசல் டாங்கர் லாரிகள் வராத காரணத்தால், டீசல் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.
 
கும்மிடிப்பூண்டி சாலையை சீரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை மாலைக்குள் டீசல் விநியோகம் சீராகும் என்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.