திங்கள், 26 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 17 செப்டம்பர் 2016 (12:03 IST)

தனுஷின் வாழ்த்தை தவறாக புரிந்து கொண்ட ஆர்வக்கோளாறுகள்!

தனுஷின் வாழ்த்தை தவறாக புரிந்து கொண்ட ஆர்வக்கோளாறுகள்!

தனுஷின் வாழ்த்தை தவறாக புரிந்து கொண்ட ஆர்வக்கோளாறுகள்!
ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா விவாகரத்து தொடர்பான செய்திகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த விவாகரத்து செய்தியை சௌந்தர்யாவும் தனது டுவிட்டர் பக்கத்தின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.


 
 
சௌந்தர்யாவின் விவாகரத்து தொடர்பான செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில் அவர் விலங்குகள் நல வாரிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து நடிகரும் சௌந்தர்யாவின் அக்கா கணவருமான தனுஷ் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இதனை சிலர் தனுஷ் சௌந்தர்யாவின் விவாகரத்துக்கு தான் வாழ்த்து தெரிவித்தார் என இணையத்தில் வசைபாடி வருகின்றனர்.

தனுஷின் வாழ்த்தை தவறாக புரிந்து கொண்ட ஆர்வக்கோளாறுகள்!

 
 
சௌந்தர்யா தனது விவாகரத்து தொடர்பான டுவிட்டுக்கு அடுத்ததாக தனுஷின் வாழ்த்து செய்தியை டுவிட் செய்ததால் இந்த குழப்பம் வந்திருக்கிறது. ஒரு சிலர் இதனை புரிந்துகொள்ளாமல் தனுஷ் சௌந்தர்யாவின் விவாகரத்துக்கு வாழ்த்து சொன்னதற்கு இது தான் காரணம் என கட்டுக்கதைகளையும் அவிழ்க்க ஆரம்பித்துள்ளனர்.
 
தனுஷ் வாழ்த்து சொன்னதற்கு ரஜினி கோபமாக இருக்கிறார் என கூட வதந்திகள் உலா வருகின்றன.