திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 17 டிசம்பர் 2023 (17:14 IST)

சபரிமலை சென்ற பக்தர்கள் விபத்தில் பலி! – தேனி அருகே சோகம்!

Accident
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தரிசனம் சென்றுவிட்டு திரும்பிய ஐயப்ப பக்தர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மகரஜோதிக்காக திறக்கப்பட்ட நிலையில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து, இருமுடி கட்டி சபரிமலைக்கு பாத யாத்திரையாக சென்று வருகின்றனர். சமீப காலமாக சபரிமலையில் பக்தர்கள் தரிசன எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அவ்வாறாக 5 ஐயப்ப பக்தர்கள் சபரிமலை சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு காரில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது தேனி மாவட்டம் தேவதானப்பட்டி புறவழிச்சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் தடுப்புச் சுவரில் மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 2 பேர் படுகாயங்களுடன் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சபரிமலை சென்ற பக்தர்கள் அசம்பாவிதமாக விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K