1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 7 ஜனவரி 2017 (16:16 IST)

பொங்கல் வேட்டி சேலைகளை திருடிய துணை தாசில்தார்

திருவாரூர் அருகே பொங்கலுக்கு வழங்க இருந்த இலவச வேட்டி சேலைகளை திருடிய துணை தாசில்தார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.


 

 
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா அலுவலகத்தில் பொங்கல் பண்டிகைக்கு வழக்கமாக வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகள் 35 மூட்டைகளில் வைக்கப்பட்டு இருந்தது. 
 
இதை நன்னிலம் தேர்தல் துணை தாசில்தார் சிங்காரவேலு(35) என்பவர் வாகனத்தில் எடுத்துச் சென்றார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
 
விசாரணையில் சிங்காரவேலு வேட்டி, சேலைகளை திருடிச் சென்று விற்றது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.