1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (19:44 IST)

இரண்டாவது முறையாக திமுக ஆட்சிக்கு வந்ததாக வரலாறு கிடையாது -முன்னாள் அமைச்சர் செம்மலை!

திருவள்ளூர் மாவட்ட
பூந்தமல்லி ஒன்றிய அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பூந்தமல்லி அருகே ஒன்றிய செயலாளர்கள் கௌதமன் தலைமையில் நடைபெற்றது இதில் முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின் செம்மலை ஆகியோர் சிறப்பு விருதுநகராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
 
இதையடுத்து முன்னாள் அமைச்சர் செம்மலை அளித்த பேட்டியில் : 
 
ஆளுகின்ற திமுக ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி, கோபம் என்பதைவிட வெறுப்பு தொடங்கியுள்ளது இந்த நிலை நீடிக்கும் போது மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் திமுகவினருக்கு அந்த வாய்ப்பு இல்லை
 
திமுக கூட்டணியில் ஒட்டி கொண்டிருக்கிற கூட்டணி கட்சிகளும் விலகுவதற்கு வாய்ப்பு உள்ளது அந்த வாய்ப்பு ஏற்படும் பவள விழா நடத்தி கூட்டணி உறுதியாக உள்ளது என்று கூறினாலும் மக்களின் கருத்து வேறுபட்டு உள்ளது
 
நிலையான கூட்டணியாக இது இருக்காது
 
கூட்டணியில் அங்கம் வகிக்க 10 காரணங்கள் இருக்கலாம் விலகுவதற்கு ஒரு காரணம் போதும் அந்த காரணம் மக்களுக்கு இந்த ஆட்சி மீதுள்ள வெறுப்பு தான் காரணமாக இருக்க  போகிறது
 
இரண்டாவது முறையாக திமுக ஆட்சிக்கு வந்ததாக வரலாறே கிடையாது
அந்த வரலாறு அதிமுகவிற்கு மட்டுமே உள்ளது மீண்டும் திமுக ஆட்சிக்கு வருவது நடக்காத காரியம்
 
மது ஒழிப்பு மாநாடு என்பது ஏமாற்று வேலை எந்த கொள்கையிலும் உறுதி இல்லாத நிலையில் தான் திமுக உள்ளது
 
மதுக்கடைகளையும் நடத்தி கொண்டு திருமாவளவன் நடத்துகின்ற மது ஒழிப்பு மாநாட்டிற்கு கலந்து கொள்கிறார் என்று கூறினால் ஜீவகாருண்ய மாநாட்டிலே கசாப்பு கடைக்காரன் கலந்து கொள்வது போல்தான் நிலைப்பாடு உள்ளது
 
இது ஏமாற்று வேலை இதனை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் இது நாடகம் என பேசினா இந்த நிலையில் விழா மேடையில் சிறப்பு விருந்தினராக வந்த முன்னாள் அமைச்சர் செம்மலைக்கு முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் மாலை அணிவித்தார்.
 
மற்றொரு மாலை பெஞ்சமினுக்கு அணிவிக்க இல்லாததால் தான் அணிந்து கொண்டிருந்த மாலையை பெஞ்சமினுக்கு, செம்மலை அணிவிக்க முயன்ற போது அதனை பெஞ்சமின் தடுத்த நிலையில் இருவரும் சிறிது நேரம் மாலையை கையில் பிடித்தபடி யார் கழுத்திலும் போடாமல் இருந்தது சிரிப்பலையை ஏற்படுத்தியது.