உணவகங்கள், பார்களை மூட அதிரடி உத்தரவு!
உணவகங்கள் மற்றும் பார்களை மூட டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மற்றும் டெல்லி ஆகிய இரண்டு மாநிலங்களில் தான் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன் டெல்லியில் உணவகங்கள் பார்களை மூட டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இதனால் டெல்லி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.