1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 2 டிசம்பர் 2021 (12:01 IST)

டிசம்பரில் வழக்கத்தை விட 132% கூடுதலாக மழைப்பொழிவு..!

டிசம்பர் மாதத்தில் வழக்கத்தை விட 132% கூடுதலாக மழைப்பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு.

 
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. வங்க கடலில் முன்னதாக சில காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவானாலும் அவை புயலாக வலுவடையாமலே கலைந்தன. எனினும் தொடர்ந்து உருவான காற்றழுத்த தாழ்வு பகுதிகளால் பல இடங்களில் நல்ல மழை பெய்தது. 
 
இந்நிலையில் தற்போது அந்தமான் தீவுகள் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் டிசம்பர் மாதம் 4 காற்றழுத்தங்களும், ஜனவரி மாதத்தில் 3 காற்றழுத்தங்கள் உருவாகி ஜனவரி மாதம் 24 ஆம் தேதி வரை மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனிடையே தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் நடப்பு டிசம்பர் மாதத்தில் வழக்கத்தை விட 132% கூடுதலாக மழைப்பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதாவது தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கடலோர ஆந்திரா, கேரளா, தெற்கு கர்நாடகா ஆகிய இடங்களில் வழக்கத்தை விட 132% கூடுதல் மழைப் பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மழை மற்றும் வெப்பநிலை கணிப்பு மையம் வெளியிட்டுள்ளது.