1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (07:53 IST)

சென்னை உள்பட 15 மாவட்டங்களில் இன்று காலை மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வளிமண்டல சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு மற்றும் வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சில வாரங்களாக சென்னை உள்பட தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இன்று தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் அதாவது புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்த ஏழு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Edited by Siva