1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: புதன், 13 ஜூலை 2016 (13:38 IST)

மாமியார், மருமகள் கூட்டணியில் கொலை சம்பவம்

சிவகங்கை மாவட்டத்தில் மாமியார் மருமகள் சேர்ந்து ஒரு பெண்ணை தாக்கியதில், அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.


 

 
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருஉடையார்பட்டியை சேர்ந்த சீதாலட்சுமி(45) என்பவருக்கும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த ரேவதிக்கும்(35) தண்ணீர் பிடிப்பதில் பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
 
பிரச்சனையில் ரேவதி மற்றும் அவரது மாமியார் கூட்டு சேர்ந்து சீதாலட்சுமியை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதில் சீதாலட்சுமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், ரேவதி மற்றும் அவரது மாமியார் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.