திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 7 மார்ச் 2019 (08:24 IST)

பத்தே நாளில் விதவையான மகள்! மனமொடிந்த தந்தை தற்கொலை!

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே  கூலித்தொழிலாளி ஒருவரின் மகள் திருமணம் ஆன பத்தே நாளில் எதிர்பாராத வகையில் விதவையானதால் அதிர்ச்சி அடைந்த தந்தை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியினர்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
திருப்பத்தூர் அருகே குனிச்சிமோட்டூர் என்ற பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி பெரியண்ணன். இவரது மகள் சுமதியின் திருமணத்திற்காக தான் கஷ்டப்பட்டு பணம் சேர்த்து வைத்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு மகளுக்கு ஒரு நல்ல வரனை பார்த்து திருமணம் செய்து வைத்தார்.
 
மகளின் திருமணம் சிறப்பாக முடிந்ததை அடுத்து நிம்மதியடைந்த பெரியண்ணனுக்கு பேரிடையாக பத்தே நாட்களில் மகளின் கணவர் எதிர்பாராத வகையில் மரணம் அடைந்த செய்தி கிடைத்தது. மகள் பத்தே நாட்களில் விதவையானதால் பெரும் சோகத்தில் இருந்த பெரியண்ணன்,  கடந்த சில நாட்களாக மன வேதனையில் இருந்ததாகவும் யாரிடமும் அவர் பேசாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் மொளகரம்பட்டி நந்தனம் கலைக் கல்லூரி அருகே, ரயில் முன் பாய்ந்து, பெரியண்ணன் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைபற்றிய ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான பத்து நாட்களில் கணவரை இழந்து தற்போது தந்தையையும் இழந்த சுமதி இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வரவில்லை என கூறப்படுகிறது