ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 1 மே 2019 (17:27 IST)

மனிதர் போல் பாட்டுக்கு டான்ஸ் ஆடி... பாயில் தூங்கும் ’கன்றுகுட்டி ’

உலகெங்கிலும் விலங்குகள் இருந்தாலும் இந்தியாவில் மட்டும்தான் சில விலங்குகளை கடவுளாகவும், பறவைகளை கடவுளின் வாகனமாகவும் மரபுவழியாக தொழுது வணங்கி மரியாதை செலுத்தி வருகின்றனர்.  
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகேயுள்ள வீராங்குப்பத்தில் வசிப்பவர் ஆனந்தன். இவர் தனது  வீட்டில் கால்நடைகளை வளர்த்துவருகிறார். சில மாதங்களுக்கு முன்பு  ஒரு கறவைமாடு ஒன்றை வாங்கி பாசத்துடன்  வளர்த்து வந்துள்ளார். அந்த பசு அண்மையில் ஒரு ஆண் கன்று ஈன்றதாகத் தெரிகிறது.
 
இந்தப் பசு மற்ற பசுக்கன்றுகளைப்போல் இல்லாமல் மனிதர்களுடன் சுவாரஸியம் ஊட்டும் விதமாக பழகியுள்ளது.
 
வழக்கமாக கன்றுகள் தாயுடன்தான் இருக்கும். ஆனால் இந்தக் கன்று வீட்டுக்குள் வந்து பாயில் படுத்து தூங்குவதுடன், தண்ணீர் அருந்துவது, தின்பண்டங்களை உண்பது. இத்துடன், மின்விசிறியில் நிற்பது, மின்விளக்கு போட்டால் அந்த ஒளியில் இருப்பது, பாட்டுப் போட்டால் அதற்கு நடனமாடுவது போன்று உடலை அசைப்பது போன்றவை அப்பகுதில் உள்ளவர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
கன்றுக்குப் பசி எடுக்கும் போது மட்டும்தான் தாய்ப்பசுவிடம் சென்று பால்குடிக்கும் என்று அங்குள்ளவர்கள் தெரிவிக்கிறார்.