ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (17:13 IST)

காலையில் காளியம்மாளுக்கு வாழ்த்து சொல்லாத சீமான்.. நெட்டிசன்கள் ஆவேசம்..!

நாம் தமிழர் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான காளியம்மாள் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் சற்றுமுன் சீமான் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால் காளியம்மாளுக்கு இன்று பிறந்தநாள் என்பது சீமானுக்கு காலையில் தெரியாதா? ஏன் தாமதமாக வாழ்த்து சொல்கிறார்? என நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்கள் ஆகவே நாம் தமிழர் கட்சியில் இருக்கும் காளியம்மாவுக்கும் சீமானுக்கும் கருத்து வேறுபாடு என்று கூறப்பட்டு வருவதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் காளியம்மாள் விரைவில் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் அல்லது அவராகவே கட்சியிலிருந்து வெளியேறி விடுவார் என்றும் ஒரு வதந்தி பரவி வருகிறது. 
 
இந்த நிலையில் இன்று காளியம்மாள் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் சற்றுமுன் அவருக்கு சீமான் தனது சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
எளிய பின்புலத்தில் நாட்டின் கடைக்கோடியில் பிறந்து, தனது தனித்துவமிக்கப் பேச்சுத்திறனாலும், ஒப்பற்ற அறிவாற்றலாலும் பெரும் ஆளுமையாக உயர்ந்து, மண்ணுக்கும், மக்களுக்குமான மாற்று அரசியலைக் கட்டியெழுப்பி வரும் நாம் தமிழர் கட்சி எனும் மக்கள் இராணுவத்தின் முதன்மைத்தளபதிகளுள் ஒருவராகத் திகழும் என்னுயிர் தங்கை பி.காளியம்மாள் அவர்களுக்கு அன்பு நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!
 
Edited by Siva