வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 18 ஜனவரி 2024 (17:18 IST)

ஹேக் செய்யப்பட்ட ஆளுநர் தமிழிசையின் ‘எக்ஸ்’ பக்கம்: மீட்டது தெலுங்கானா சைபர் க்ரைம்..!

தெலுங்கானா மற்றும் புதுவை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் சமூக வலைதளம் சமீபத்தில் ஹேக் செய்யப்பட்ட நிலையில் கவர்னர் மாளிகையின் தொழில்நுட்ப வல்லுநர்கள் அதை மீட்க முயற்சி செய்து முடியவில்லை
 
இதனை அடுத்து தெலுங்கானா மாநில சைபர் க்ரைம் அதிகாரிகளிடம் அந்த பணி ஒப்படைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி  தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் எக்ஸ் தளம் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது குறித்து ஆளுநர் சமூகராஜன் தலைவர் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது
 
எனது எக்ஸ் தள கணக்கை மீட்டெடுத்த தெலங்கானா காவல் துறை சைபர் கிரைம் பிரிவு, தெலங்கானா போலீஸார், இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் ஆகியோருக்கு நன்றி. 
 
கடந்த மூன்று நாட்களாக எனது எக்ஸ் தள கணக்கை அணுக இயலவில்லை. தற்போது முழுமையாக மீட்கப்பட்டு பாதுகாப்பாக உள்ளது. இனி முன்னோக்கி நகர்கிறேன். இத்தளத்தில் எனது நல்ல பணிகளை பகிர்வதை தொடர விரும்புகிறேன்" 
 
Edited by Mahendran