புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 6 நவம்பர் 2019 (09:27 IST)

கூடங்குளத்தை அடுத்து இஸ்ரோவுக்கு சைபர் அட்டாக் எச்சரிக்கை !

கூடங்குளம் அனுமின்நிலையத் தகவல்கள் ஹேக் செய்யப்பட்டதை அடுத்து இஸ்ரோவின் தகவல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என சொல்லப்படுகிறது.

கூடங்குளம் அனுமின்நிலையத்தின் தகவல்கள் வடகொரியாவைச் சேர்ந்த சிலரால் ஹேக் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனை அனு மின்சாரக்கழகமும் கடந்த வாரம் உறுதி செய்தது. இதேப்போன்றதொரு சைபர் அட்டாக் இஸ்ரோவின் மீது நிகழ்த்தப்படலாம் என சொல்லப்படுகிறது.

இது சம்மந்தமாக ஆங்கில ஊடகமன இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது சம்மந்தமாக அமெரிக்க இணைய பாதுகாப்பு நிறுவனம் ஒன்றும் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த தகவல்களுக்கு இஸ்ரோவில் இருந்து இதுவரை எந்தவிதமான பதிலும் வெளியிடப்படவில்லை.